நாடாளுமன்றத்தில் ராமஜெனம பூமி மசோதா: பா.ஜ. வலியுறுத்தல்

திங்கள், 4 அக்டோபர் 2010 (19:56 IST)
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதை உறுதிபடுத்தும் வகையில் அது தொடர்பாக ராமஜெனமபூமி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான முயற்சியை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் வினய் கட்டியார், அலகாபாத் நீதிமன்றம் தற்போது தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டதால், ராமஜெனமபூமி மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற சட்ட ரீதியான கோரிக்கை நிஜமாகி உள்ளது.

ராமர்கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதா, குஜராத்தில் சோம்நாத் கோவிலைக் கட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கொண்டுவந்ததைப்போன்று இருக்க வேண்டும் என்று படேல் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்