அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் 12,553 ரூபாய் என அவரது சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம்செய்துள்ள சொத்து விவர அறிக்கையில்,2011-2012 ம் ஆண்டில் மோடியின் மாத சம்பளம் ரூ.12,553 என குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தாக்கல் செய்துள்ள சொத்து விவர அறிக்கையின்படி, அவரது மாத சம்பளம் 12,553 ரூபாய் ஆகும். இது அரசு புயூனின் மாத சம்பளத்தை விட குறைவாகும்.
குஜராத் காந்திநகரில் 330 சதுர மீட்டர் பரப்பளவில் சிறிய வீடு மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடும் 2002ம் ஆண்டு மாநில அரசால் உயர்ந்த மானிய விலையில் அளிக்கப்பட்டதாகவும். 2007ம் ஆண்டு ரூ.30 லட்சமாக இருந்த மோடியின் மொத்த சொத்தின் மதிப்பு, தற்போது ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது.
சொத்து மதிப்பு கூடினாலும் அவரிடம் உள்ள பணத்தின் அளவு 4,700 ரூபாயாக குறைந்துள்ளது.2007 ம் ஆண்டு தேர்தலின் போது இது ரூ.11,200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர மோடியிடம் ரூ.1,23,777 மதிப்பிலான 4 தங்க மோதிரங்களும், வங்கித்தொகையாக ரூ.27,24,409 ம் உள்ளது. மேலும் உள்கட்டமைப்பு துறையில் மோடி ரூ.20,000 அளவிற்கு முதலீடு செய்துள்ளார்.
அவரது புதிய சொத்து விபரத்தின் படி தேசிய சேமிப்பு சான்றிதழ் கணக்கின் கீழ் ரூ.14,636 மதிப்பிலான சொத்து உள்ளது.
குஜராத் முதல்வராக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மோடி பெற்ற மொத்த சம்பளம் ரூ.39 லட்சம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நரேந்திர மோடி பெற்ற மொத்த வருமானம் ரூ.1,50,630 ஆகும்.