கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த தனி தெலங்கானா மாநில போராட்டம், தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இன்றும், நாளையும் இரயில் மறியல் நடக்க உள்ளதால் பல இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலங்கானா அரசியல் கூட்டு போராட்ட குழு சார்பில், கடந்த 13ஆம் தேதியில் இருந்து தெலங்கானா பகுதியை சேர்ந்த அனைத்து பிரிவினரும் இணைந்து பங்கேற்கும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று முதல் 2 நாட்கள் இரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால் தெலங்கானா பிராந்தியம் வழியாக செல்லும் பல இரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.