தெலுங்கு, கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு!

சனி, 1 நவம்பர் 2008 (01:08 IST)
தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்படும் என்று, மத்திய கலாசார‌த்துறை அமை‌ச்ச‌ரஅம்பிகா சோனி தெரிவித்தார்.

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு, கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்திருந்தது.

இந்த கோரிக்கை பற்றி பரிசீலிப்பதற்காக மொழியியல் அறிஞர்கள் குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழுவின் பரிந்துரைப்படி, தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்படும் என்று, மத்திய கலாசார‌த்துறை அமை‌ச்ச‌ரஅம்பிகா சோனி தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லரிட் மனு ஒன்று நிலுவையில் இருந்து வருவதால், அந்த மனுவை விரைவில் பைசல் செய்யும்படி மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்