தீவிரவாதிகளுடன் தொடர்பு; பெங்களூர் டாக்டர் சிக்கினார்

திங்கள், 3 செப்டம்பர் 2012 (15:43 IST)
தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய டாக்டர் ஒருவரை பெ‌ங்களூரு‌வி‌ல் காவ‌‌‌ல்துறை‌யின‌ர் கைது செய்து‌ள்ளன‌ர்.

கடந்த ஒரு வாரமாக மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையதாக சந்தேகித்த பலரை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேவங்கிரியை சேர்ந்த டாக்டர் நயீம் சித்திக், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கை வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் நயீமிடமிருந்த செல்போன், மடிக்கணினி, பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் நடந்து வரும் தீவிரவாத சதி செயல்களை இங்கிருக்கும் தேச திரோகிகளுடைய ஆதரவோடு ‌தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரு‌‌‌‌கி‌‌ன்றன.

இதுவரை பெங்களூரில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹைதராபாத் மாணவர், பத்திரிகையாளர் மற்றும் பலரும் போலீஸகாவலிலவைக்கப்பட்டபயங்கரவாதிட்டங்களுக்கு உதவிய குற்றத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்