திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்து 3வது பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (11:48 IST)
திருநங்கைகளை மூன்றாவது  பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 
பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருநங்கைகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவேண்டுமென  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மேலும்,  திருநங்கைகளும் நாட்டின் குடிமக்கள் என்பதால், கல்வி, வேலையில் சம உரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.   
 

வெப்துனியாவைப் படிக்கவும்