தினசரி ரூ. 10 கோடி இழப்பை சந்திக்கும் ஏர் இந்தியா நிறுவனம் - மத்திய அமைச்சர் அஜித் சிங்
புதன், 28 மார்ச் 2012 (16:20 IST)
FILE
ஏர் இந்தியா நிறுவனம் தினசரி ரூ. 10 கோடி இழப்பை சந்தித்து வருகிறது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் அஜித் சிங், கடந்த மார்ச் 15 வரை பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ 574.67 கோடி வசூலித்துள்ளது என்றார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ரூ 114.35 கோடியும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூ 212 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதே போன்று வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து ரூ 112.98 கோடியும் ஏர் இந்தியா விமான நிறுவனம் வசூலித்துள்ளது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
News Summary : Central Civil Aviation Minister Ajit Singh today said Air India was making operational losses Rs 10 crore every day.