தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்தார் - பெண் பரபரப்பு புகார்

வெள்ளி, 29 நவம்பர் 2013 (16:19 IST)
FILE
டெஹல்கா நிறுவன ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் தன்னிடம் நடந்துக்கொண்ட விதத்திற்கு சட்டப்படி 'பாலியல் பலாத்காரம்' எனப் பெயரென்று அவர்மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெஹல்கா நிறுவனத்தில் பணிப்புரிந்த அப்பெண் பத்திரிகையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கடந்த 15 நாட்களாக எனக்கு அதிக அளவில் ஆதரவு கிடைப்பது மன ஆறுதலை தருகிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதி என்னும் விதத்தில் கருதப்படுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தருண் தேஜ்பால் மீது நான் பாலியல் புகார் அளித்தப்பின், அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துக்கொள்வதற்கு முன்னும், அதற்கு பின்னும் எனது செயல்பாடுகள் குறித்தும், நான் இப்போது எதற்காக இதுகுறித்து புகார் அளித்தேன் என்பது குறித்தும் பல கோணங்களில் தொலைக்காட்சி
விமர்சகர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

டெஹல்கா நிறுவன ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் என்னிடம் நடந்துக்கொண்ட விதத்திற்கு சட்டப்படி 'பாலியல் பலாத்காரம்' எனப் பெயர்...

FILE
தருண் தேஜ்பாலைபோல நான் செல்வாக்கு மிகுந்த நபர் கிடையாது. எனது தாயார் ஒருவரின் வருமானத்தில்தான் படித்து முடித்தேன். எனது தந்தையின் உடல்நிலை பல வருடங்களாக மோசமான நிலையில் உள்ளது.

தேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. எனது தன்மானத்திற்காக போராடுகிறேன். நான் மட்டுமே உரிமைக்கொள்ளும் எனது உடல், நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளருக்கு விளையாட்டுப்பொருள் அல்ல.

இப்போது நான் இது குறித்து புகார் அளித்ததால் நான் மிகவும் நேசித்த எனது பணியை மட்டும் இழக்கவில்லை. எனது நிதி பாதுகாப்பு மற்றும் வருமான சுதந்திரத்தை இழந்துள்ளேன். எனினும், இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தால் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது என பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், டெஹல்கா வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தான் இது நடந்ததே தவிர புகார் அளித்த என்னால் அல்ல.

அனைவரது ஆதரவுக்கும் நன்றி.

இவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்