டெல்லி காவல்துறைக்கு கெடு; பிரதமர் முக்கிய ஆலோசனை

திங்கள், 22 ஏப்ரல் 2013 (17:19 IST)
FILE
டெல்லி மற்றும் சில முக்கிய நகரங்களில் ஆங்காங்கே வலுத்துவரும் போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்றநள்ளிரவஅவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதன் இறுதியில் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லி காவல்துரை என்ன செய்தது? என்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வலுத்து உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு டெல்லி காவல்துறையினரின் மெத்தனமாக செயல்பாடுகளே காரணம் என்று மத்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும் கருதுகிறது. இதைத்தொடர்ந்து டெல்லி காவல்துறை ஆணையர் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மூத்த அமைச்சர்களுடன்; ஆலோசனை நடத்தினார். அப்போது டெல்லியில் காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சிறுமி கற்பழிப்பு தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்தது ஏன்?, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர், எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் தொடர்பான முழு விவரங்களையும் 24 மணி நேரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை இலாகா உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் டெல்லி காவல் துறை ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவறுகிறது. இது குறித்து டெல்லி காவல் ஆணையர் நீரஜ் குமார் கூறிகையில், டெல்லி சிறுமி கற்பழிப்பிற்காக தான் ராஜினாமா செய்ய போவதில்லை என கூறியுள்ளார்.மேலும் தனது ராஜினாமா இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது என அவர் கூறியுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்