டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயராது-மத்திய அரசு

சனி, 19 நவம்பர் 2011 (09:40 IST)
டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.360 கோடி இழப்பு ஏற்படுகிறது.

பெட்ரோல் தவிர, மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய கட்டுப்பாடு மத்திய அரசிடமே உள்ளன. எனவே, டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலை குறைப்பு ஆகிய இரண்டு முடிவுகளுமே பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை.

பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால், டீசல் விலை உயர்வு திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்