ஜம்மு-காஷ்மீர் சாலை மேம்பாட்டிற்கு ரூ. 1,200 கோடி

புதன், 15 ஜூலை 2009 (14:11 IST)
பிரதமர் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சாலைகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டிற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய செலவிடப்பட்டு வருவதாக அம்மாநில அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் இரவும் பகலும் சாலை பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், முடிவு பெறாமல் இருக்கும் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.

சாலைகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்படும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்