சொகுசு பேருந்துகள் மீதும் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை

வியாழன், 15 செப்டம்பர் 2011 (17:24 IST)
மும்பை-அகமதாபாத் இடையே செல்லும் சொகுசு பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான எச்சரிக்கையை மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை காவல்துறைக்கும் மத்திய உளவுத்துறையான ஐபி அனுப்பியுள்ளது.

இதையடுத்து மும்பையில் இருந்து அகமதாபாத் செல்லும் அனைத்து பயணிகளின் அடையாளங்களையும் கவனமாக பரிசோதிக்குமாறு சொகுசு பேருந்துகளின் உரிமையாளர்களை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகள் கொண்டுவரும் சரக்குகளையும், உடைமைகளையும் சோதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நடுவழியி்ல் எந்த பார்சலையும் ஏற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்பை தொடர்ந்து, சிறிய விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ பயன்படுத்தி மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்தை தீவிரவாதிகள் தாக்கலாம் என சில தினங்களுக்கு முன் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்