சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (15:09 IST)
FILE
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த தென்கொரிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக ஹோட்டல் ஊ‌‌‌ழிய‌ர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்ட 23 வயது தென் கொரிய பெண், கடந்த 14 ஆம் தேதி பந்தர்வார்க் புலிகள் சரணாலயம் அருகில் இருந்த ஹோட்டலில் தங்கினார். அப்போது, ஹோட்டல் ஊ‌‌‌ழிய‌ரிடம் பீர் ஆர்டர் செய்த அப்பெண், பீரை அவரது அறைக்கு கொண்டுவரும்படி கூறியிருக்கிறார்.

பீரில் மயக்க மருந்து கலந்த ஊ‌‌‌ழிய‌ர், அதனை அப்பெண்ணிற்கு அளித்துள்ளார். பீரை அருந்திவிட்டு மயங்கிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஊ‌‌‌ழிய‌ர், அவர் மயக்கம் தெளியும் முன் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இதுகுறித்து புகார் அளிக்க தயங்கிய தென் கொரிய பெண், தனக்கு நேர்ந்த அவலத்தை அவருக்கு தெரிந்த டூரிஸ்ட் கைடிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டூரிஸ்ட் கைடு உடனடியாக போலீசாரிடம் புகா‌ர் அளிக்கும்படி வற்புறுத்தினார்.

இதையடுத்து அவுரங்கபாத் காவல் நிலையத்தில், தென் கொரிய பெண் ஹோட்டல் ஊ‌‌‌ழிய‌ர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அ‌ளி‌த்தா‌ர்.

இது குறித்து அவுரங்கபாத் காவல்துறை துணை ஆணையர் நரேஷ் மேக்ராஜினி கூறுகை‌யி‌ல், தென் கொரிய பெண் அளித்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்