சுற்றுலாத் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

சனி, 18 ஜூலை 2009 (12:52 IST)
8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களுக்கு சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2003-04ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஹோட்டல் தொழிலுக்கு ஆண்டுதோறும் பயிற்சி பெற்ற சுமார் 2 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தும் திட்டமொன்றை அரசு தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் உணவு தயாரித்தல் மற்றும் உபசரிப்பு சேவைகளில் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்