சுக்னா நில ஊழல்: இராணுவ அதிகாரிக்கு தண்டனை அறிவிப்பு

சனி, 22 ஜனவரி 2011 (18:57 IST)
சுக்னா நில ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ துணை தலைமை தளபதியான பி.கே. ராத்துக்கு 2 ஆண்டுகள் பணி மூப்பு மற்றும் பணி காலத்தின் 15 ஆண்டுகள் சேவை இழப்பை அளித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுக்னா இராணுவ தளம் அருகே உள்ள ஒரு இடத்தில் தனியார் ஒருவருக்கு கல்வி நிலையம் கட்டிக்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதை வழங்கியது அப்போது இராணுவ கட்டளை தளபதியாக இருந்த பி.கே. ராத் ஆவார்.

இந்நிலையில், இந்த சான்று வழங்கப்பட்டதில் சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பான விசாரணையில் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தவிர ராத் மேலும் பல ஊழல் குற்றச்சாற்றுக்கள் கூறப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது,.

இந்த வழக்கில் ராத் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்த இராணுவ நீதிமன்றம்,, தண்டனை தீர்ப்பு என்ன என்பதை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தண்டனை தீர்ப்பளித்த நீதிமன்றம், ராத் 2 ஆண்டு பணி மூப்பையும், அவரது பணி காலத்தின் 15 ஆண்டுகளுக்கான சேவையையும் இழப்பதாக அறிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்