சிவசங்கர் மேனன் மார்ச் 5இல் ஆப்கானிஸ்தான் பயணம்

திங்கள், 1 மார்ச் 2010 (13:16 IST)
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அந்நாட்டு அதிபர், அதிகாரிகளுடன் விவாதிக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வரும் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் செல்கிறார்.

காபூலில் மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தங்கியிருக்கும் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய், உயரதிகாரிகளை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த 26ஆம் தேதி தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் சென்று அந்நாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேச்சு நடத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதன் பேரில் சிவசங்கர் மேனன் வரும் 5ஆம் தேதி அவசரப் பயணம் மேற்கொள்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்