சிலிண்டர், டீசல் விலையையும் உயர்த்தவேண்டும் - பிரதமர் ஆலோசகர்

சனி, 2 ஜூன் 2012 (14:50 IST)
இந்தியாவினநிதிப்பற்றாக்குறையைபபோக்பெட்ரோலவிலையையடுத்தடீசல், சமையலஎரிவாயவிலையையுமஉயர்த்தவேண்டுமஎன்றபிரதமரினஆலோசகரி.ரங்கராஜனகூறியுள்ளார்.

பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக டாக்டர் சி.ரங்கராஜன் உள்ளார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது நிதி பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. இதை தடுக்க வேண்டுமானால் மானியம் வழங்கப்படுவதை குறைக்க வேண்டும். பெட்ரோலியம் பொருட்களுக்குத்தான் அதிக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. டீசல், கியாஸ் விலையை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல், கியாஸ் விலையை கணிசமாக உயர்த்தினால் தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். ஏழைகள் பாதிக்கப்பட கூடாது என்பதால் அரசு இதில் மிதமான போக்கை கடை பிடிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்