சிதம்பரத்தை புறக்கணிக்க காரணம் எதுவுமில்லை: பிரதமர்

செவ்வாய், 22 நவம்பர் 2011 (14:00 IST)
2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நாடாளுமன்றத்தில் புறக்கணிக்க காரணம் எதுவுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது சிதம்பரம் பங்கேற்கும்போது, அக்கூட்டத்தை புறக்கணிக்க எதிர்கட்சி கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்றே, எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை கையிலெடுத்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து கேட்டபோது,எதிர்கட்சிகள் சிதம்பரத்தை புறக்கணிக்க காரணம் எதுவுமில்லை என்றும், இதுபோன்ற எதிர்ப்பை எதிர்கட்சிகள் நிறுத்திக்கொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதேப்போன்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி.நாராயண சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், சிதம்பரம் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், 2ஜி ஊழலில் சிதம்பரத்திற்கு தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்