காமன்வெல்த் ஊழல்: கண்காணிப்பு வளையத்தில் மொரீசியஸ் நிறுவனம்

புதன், 1 ஜூன் 2011 (19:58 IST)
காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக தனது கண்காணிப்பு வளையத்தில் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை சிபிஐ கொண்டுவந்துள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக விளையாட்டு மைதானங்களின் மேம்பாடு மற்றும் நிர்வாகம், பணியாளர் எண்ணிக்கை, போட்டி ஏற்பாடுகள் மற்றும் திட்ட மேலாண்மை சேவைகள் ஆகியவை குறித்து ஆலோசனை அளிப்பதற்காக ரூ. 70 கோடி மதிப்பில் மொரீசியஸ் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் "ஈவென்ட் நாலெட்ஜ் சர்வீசஸ்" என்ற நிறுவனத்துக்கு 3 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டி தொடர்பான பணிகளுக்கு ஆலோசனை வழங்கியது தொடர்பாக அந்த நிறுவனத்தின் செயல்பாடு சட்டவிரோதமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த பரிந்துரையின் பேரில், விளையாட்டு அமைச்சகம் சார்பில் சிபிஐ அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்