காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணி தொடரும்: மம்தா திட்டவட்டம்

திங்கள், 1 மார்ச் 2010 (17:42 IST)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி தொடரும் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்காலி தொலைக்காட்சிக்கு மம்தா அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். நாங்கள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்போம். அதேசமயம் மக்களுக்கு ஏற்படும் குறைகளையும் அரசுக்கு எடுத்துரைப்போம்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டு மக்கள் அவதிப்பட்டு வரும் இத்தருணத்தில் எரிபொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது சரியான முடிவு அல்” எனக் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசலின் விற்பனையை விலையை மத்திய அரசு கடந்த 27ஆம் தேதி உயர்த்தியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாக காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணி முறியும் என்று சிலர் கருதிய நிலையில் மத்திய அரசுடன் கூட்டணி தொடரும் என மம்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்