கலெக்டரை மீட்க அரசு ஹெலிகாப்டர் சென்றது!

வியாழன், 3 மே 2012 (10:58 IST)
சட்டீஸ்கர் மாநில அரசு ஹெலிகாப்ப்டர் இன்று காலை ராய்பூரிலிருந்து கலெக்டர் விடுவிக்கப்படுவதாக கருதப்படும் தர்மெட்லா பகுதிக்குச் சென்றுள்ளது.

ராய்ப்பூரிலிருந்து 500கிமீ தொலைவில் மாவோயிஸ்ட்கள் அவரை விட்டுவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூதுவர்கள் ஹர்கோபால், பி.டி.ஷர்மா ஆகியோர் கலெக்டரை அழைத்துவரச் செல்கின்றனர்.

மேனன் இன்று மதியம் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் ஏப்ரல் 21ஆம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார்.

மாவோயிஸ்ட்கள் இன்று மதியம் கலெக்டரை விடுவிக்கும் தார்மெட்லா பகுதியில் 76 துணை ராணுவப் படை வீரர்களை மாவோயிஸ்ட்கள் ஏப்ரல் 2010-இல் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்