கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் பெயரை உளறிய ஷிண்டே

வெள்ளி, 1 மார்ச் 2013 (17:52 IST)
FILE
மஹாராஷ்ட்ராவில் கற்பழிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பெயரை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வெளியிட்டார். ஷிண்டேயின் இந்த முறையற்ற செயலுக்கு அவையில் எதிர்ப்பு கிளம்பியது. இதனஅடுத்தசட்டமதெரியாஷிண்டபதவி விலவேண்டுமஎன்றஎதிர்க்கட்சிகளதெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது, 9 வயது மற்றும் 6 வயதே ஆன 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

சாட்சிகள் இல்லாததால் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதுபற்றி மாநிலங்கவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசுகையில், சிறுமிகளின் பெயரை வெளியிட்டார்.

இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. கேள்விக்கு என்ன பதில் கூறுகிறோம் என்று தெரியாமல் ஷிண்டே உளறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றினர். இதனை அடுத்து ஷிண்டேயின் பேச்சி அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

சட்டமே தெரியாத ஒருவர் உள்துறை அமைச்சராக செயல்படுவது வேதனையாக உள்ளதாகவும், ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்