ஓரினச் சேர்க்கை: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வெள்ளி, 3 ஜூலை 2009 (14:17 IST)
ஓரினச் சேர்க்கை பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்றால் சட்டவிரோதமாகக் கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் இன்று புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது 377ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவருவதா? என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்