ஒரு விஐபிக்கு 3 போலீசாம், ஆனால் குடிமக்களில் 761 பேருக்கு ஒரு போலீஸ் தான் பாதுகாப்பாம்....

திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:47 IST)
நம் நாட்டில் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய காவல்துறையினரின் எண்ணிக்கையை விட விஐபிகளுக்கு வழங்கக்கூடிய எண்ணிக்கை அதிகமாக உள்ளதென உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை யில் தெரியவந்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 2010-ல் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 16,788 வி.ஐ.பி.களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கை 50, 059 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஆறுமாதங்களுக்கு மேல் வழங்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வி.ஐ.பியையும் பாதுகாக்க 3 காவலர்கள் உள்ளனர் என்றும், சட்டம்-ஒழுகை நிலைநாட்டி, பொதுமக்களைப் பாதுகாக்க 761 பேருக்கு ஒரு காவல்துறை மட்டுமே உள்ளனர் என்றும், உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

இதன்படி, ஒரு லட்சம் பேருக்கு 173 காவலர்கள் என நிர்ணயிக்கப்பட்டதில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 131 காவலர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்