எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சனி, 26 பிப்ரவரி 2011 (19:17 IST)
கர்நாடக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான நில ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எடியூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தமது உறவினர்களுக்கு விதிமுறைகளை மீறி அரசாங்க நிலத்தை ஒதுக்கியதாக புகார் எழுந்தது.

கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்ததை தொடர்ந்து எடியூரப்பா மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக ஸ்ரீராஜின் பாஷா மற்றும் கே.என். பலராஜ் ஆகிய இரண்டு பேர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு நகர கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதோடு, இவ்வழக்கில் சாட்சியங்களில் பதிவு செய்வதை வருகிற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்