உத்திரப்பிரதேசத்தை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் புறக்கணித்து விட்டன-மன்மோகன் சிங்

திங்கள், 27 பிப்ரவரி 2012 (23:36 IST)
கடந்த 22 வருடங்களாக உத்தரபிரதேச மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியை உருவாக்க தவறிவிட்டன என்று பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசால் நிதிகள் வழங்கப்பட்டாலும் மற்ற கட்சிகளினால் அந்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டன. இதனால், 22 வருடங்களுக்கு முன்பு மாநிலம் எந்த நிலைமையில் இறந்ததோ அதே நிலைமையில் தான் இப்போதும் உள்ளது.

நாங்கள் எவ்வளவோ நிதி கொடுத்துள்ளோம் விவசாயிகளுக்கும் தள்ளுபடி கடன் கொடுத்துள்ளோம். மாநிலத்தில் சாலைகள் சீராக இல்லாததற்கு மத்திய அரசு 9500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. ஆனால், சாலைகள் இன்னும் சீராகவில்லை. மாயாவதியின் அரசாங்கத்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்