இயற்கை வளங்கள் கொள்ளை- சோனியா குற்றச்சாட்டு

செவ்வாய், 17 ஜனவரி 2012 (14:36 IST)
உத்தரகண்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வுகாண ஒரே வழி ஆட்சி மாற்றம்தான் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தைத் துவங்கிய சோனியா இவ்வாறு கூறியுள்ளார்.

ரூர்க்கியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மோசமான அரசியல் காரணமாக உத்தரகண்ட் தேக்கநிலையில் உள்ளது என பாஜக அரசைத் தாக்கிப் பேசிய சோனியா, முதல்வரை மாற்றுவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியாது; அரசையே மாற்றுவதுதான் சரியானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் உத்தரகண்டில் முதல்வராக இருந்த ரமேஷ் போக்ரியாலை மாற்றிவிட்டு, பிசி.கந்தூரியை முதல்வராக பாஜக நியமித்திருந்ததைக் குறிப்பிட்டு சோனியா இவ்வாறு பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்