இந்திய விமானப்படையில் நவீன விமானம் சேர்ப்பு

எதிரிநாட்டு போர் விமானங்கள் வந்தால் அதனை கண்டறிந்து எச்சரிகை செய்யும் ' அவாக்ஸ் ' (AWACS) airborne warning and control systems எனப்படும் நவீன போர் விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

'வானத்தில் இருக்கும் கண் ' என்று அழைக்கப்படும் இந்த விமானம் , எதிரிநாட்டு விமானங்கள் ஆயுதங்களை சுமந்துகொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதனை கண்டறிந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கும் திறன் கொண்டது.அத்துடன் வான்வழி தொடர்புகளையும் கவனிக்கும் திறன் கொண்டது.

தெற்காசியாவில் இந்த ரக விமானத்த்தை வைத்திருக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

3 'அவாக்ஸ்' விமானங்கள் வாங்க கடந்த 2004 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஒரு விமானம் மட்டுமே வழக்ங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு விமானங்களும் விரைவிலேயே இந்தியாவிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்திய விமானப்படையிடம் தற்போது இருக்கும் ரஷ்ய தயாரிப்பான ஐஎல் - 76 ரக விமானத்தை அடிப்படையாக கொண்டே இந்த நவீன ரகத்தைச் சேர்ந்த 'அவாக்ஸ்' விமானம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவிலேயே இந்திய விமானப்படையிலுள்ள அனைத்து ஐஎல் - 76 ரக விமானங்களுக்குப் பதிலாக ' அவாக்ஸ் ' ஸை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்