இந்தியர்களை காலி செய்யும் சவுதி, கவலை வேண்டாம் என்கிறார் -சாண்டி

சனி, 30 மார்ச் 2013 (16:11 IST)
FILE
வெளிநாட்டு தொழிலாளிகளை வெளியேற்றும் சவுதி அரசின் புதிய சட்டம் குறித்து கவலை அடைய வேண்டாம் என்று கேரள முதவர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தால் அங்கு வேலை செய்யும் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்தும் பலர் அங்கு சென்று வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவிலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சாண்டி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஒரு நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் நாம் தலையிட முடியாது. இருந்த போதிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிது காலம் ஒத்தி வைத்தால், வெளிநாட்டினருக்கு உதவியாக இருக்கும்.
இந்த கால நீட்டிப்பை வழங்க முறையீடு செய்ய வேண்டி அந்நாட்டுடன் மத்திய அரசுபேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்று உம்மன் சாண்டி கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்