ஆஸி.யில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது : வயலார் ரவி

செவ்வாய், 23 ஜூன் 2009 (16:37 IST)
ஆஸ்ட்ரேலியாவில் மீண்டும் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், நிலைமை அங்கு கட்டுக்குள் இருப்பதாக அயல்நாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைசர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று ஆஸ்ட்ரேலிய அதிகாரி லிஸா பால் - ஐ சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இங்கேயும் அங்கேயுமாக நடைபெறும் ஒரு சில சம்பவங்களை தவிர பொதுவாக ஆஸ்ட்ரேலியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.

ஆஸ்ட்ரேலிய அரசின் முழுமையான பாதுகாப்பில் இந்திய மாணவர்கள் இருப்பதாக தம்மை நேரில் சந்தித்த ஆஸ்ட்ரேலிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ரவி மேலும் கூறினார்.

ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்தைதை தொடர்ந்து, அந்நாட்டு அரசால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட லிஸா பால், ஆஸ்ட்ரேலியாவின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகள் துறை செயலராக பதவி வகிக்கும் உயரதிகாரி ஆவார்.

அவர் வயலார் ரவியுடன் இணைந்து செய்தியாளர்க்ளிடம் பேசுகையில், மெல்போர்ன் போன்ற சில பிரசனைக்குரிய இடங்களில் காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும, இன்னும் சில நாட்களில் தாக்குதல் சம்பவம் குறைவதை பார்க்க முடியும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்