ஆருஷி வழக்கு: பெற்றோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு

திங்கள், 4 ஜனவரி 2010 (16:54 IST)
கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லியை அடுத்த நொய்டாவில் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமியான ஆருஷி வழக்கில், அவரது பெற்றோர் டாக்டர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆருஷியுடன் அவரது வீட்டில் வேலைபார்த்த ஹேமராஜ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கில் ராஜேஷ் தல்வார் கைதாகி பின்னர் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, விடுதலையானார்.

ஆருஷியையும், ஹேமராஜையும் கொலை செய்ததாகக் கூறி ராஜேஷ் தல்வார் கைதாகி சிறையில் இருந்தார். ஆனால் அவருக்கு எதிரான புகார் நிரூபிக்கப்படாததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆருஷி வீட்டில் வேலை பார்த்த கிருஷ்ணா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், இதுவரை அவருக்கு எதிரான புகார் நிரூபிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்