அவசர மருத்துவ சிகிச்சையை கட்டாயமாக்கும் சட்ட வரைவு நிறைவேறியது

திங்கள், 3 மே 2010 (20:20 IST)
முறையாக பதிவி செய்யப்பட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை மையங்களும் அவசர சிகிச்சை அளிப்பதை கட்டாயமாக்கும் சட்ட வரைவு (The Clinical Establishments Bill 2010) மக்களவையில் இன்று நிறைவேறியது.

விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் காயமுற்று வருவோரை ஏதாவது காரணம் சொல்லி மருத்துவ சிகிச்சை அளிப்பதை மருத்துவ மையங்கள், குறிப்பாக தனியார் மருத்துவமனைகள், மறுப்பதைத் தடுக்க இந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவ சிகிசை மையங்களும் அவசர சிகிச்சை அளிக்க மறுக்க முடியாது. அதுமட்டுமின்றி, அனைத்து மருத்துவ சிகிச்சை மையங்களும் (Clinics) முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் இச்சட்ட வரைவு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக உடல் உறுப்புகள் வணிகப் பொருளாவது தடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாநில அளவில் நாட்டளவிலும் இப்படிப்பட்ட மருத்துவ சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு வற்புறுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்