அல் - காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்

செவ்வாய், 4 மே 2010 (13:08 IST)
அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தே இந்த உளவுத் தகவல் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே நாட்டின் மேற்கு பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் உஷாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவகள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் களத்தில் உள்ள மத்திய உளவுத் துறையினரிடமிருந்து கிடைத்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்தபோதிலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அல் - காய்தாவும், லஷ்கர் இயக்கமும் தீவிரமாக உள்ள தற்போதைய நிலையில் எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.

இதனையடுத்தே அல் - காய்தாவினர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்