அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜீ ஜிங்பிங் இந்தியா வருகை

புதன், 17 செப்டம்பர் 2014 (11:27 IST)
மூன்று நாள் அரசு முறை பயணமாக செப்டம்பர், 17 ( இன்று) இந்தியா வரும் சீன அதிபர் இரு நாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
 
அகமதாபாத்துக்கு வருகை தரும் சீன அதிபரை, குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வரவேற்க காத்திருக்கின்றனர். பின்னர், பிரதமர் மோடி அவரை சந்தித்து பேசவுள்ளார்.
 
சீன அதிபரின் வருகையையொட்டி, பிரதமர் மோடி சீன பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா, சீனா இடையே தனித்துவமான உறவு உள்ளதாகக் கூறியுள்ளார். 
 
இந்தியா - சீனா உறவை மேம்படுத்துதல், சர்வதேச பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்த இரு தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே, கட்டமைப்பு துறைகளில் சீனா முதலீடு செய்வது பற்றி ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.
 
மேலும், சீன அதிபர் ஜீ ஜிங்பிங்குக்கு மோடி, தனிப்பட்ட முறையில் விருந்து கொடுக்க  திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்