அடுத்தது தேர்தல் சீர்த்திருத்தம்-அண்ணா ஹசாரே

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (13:50 IST)
ஜன்லோக்பால் மசோதாவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் அறிவித்ததையடுத்து தனது 12 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அண்ணா ஹசாரே, தேர்தல் சீரமைப்புதான் தனது அடுத்த இலக்கு என அறிவித்தார்.

தேர்தல் மற்றும் கல்வி அமைப்புகளில் சீர்மைப்பைக் கொண்டுவதுதான் தனது எதிர்காலத் திட்டம் என்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையும், நிராகரிக்கும் உரிமையும் தர வேண்டும் என்று போராடவிருப்பதாக ஹசாரே தெரிவித்தார். வாக்குச்சீட்டுகளில் உள்ளவர்களின் பெயர்களை நிராகரிக்கும் உரிமை இருந்தால்தான் அந்த வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள யாரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறும் உரிமை வாக்காளர்களுக்கு இருக்கும் என ஹசாரே குறிப்பிட்டார்.

மேலும் போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்திவைத்துள்ளேன். நான் விரும்பும் மாற்றங்கள் வரும்வரை ஓயமாட்டேன் என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்