அச்சுதானந்தன் மீது நில மோசடி புகார்: விசாரணை நடத்த உத்தரவு

வியாழன், 12 ஜனவரி 2012 (18:24 IST)
அச்சுதானந்தன் மீது நில மோசடி புகார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த தடவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்தபோது முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் மீது புதிய நில மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு, குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் அச்சுதானந்தனின் உறவினர் சோமனுக்கு,அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்ய அவர் பதவியை பயன்படுத்தி உதவியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அரசு நிபந்தனையை மீறி அந்த நிலத்தை கூடுதல் விலைக்கு சோமன் விற்று விட்டதாக தெரிகிறது.

தற்போது இது குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்