லோக்பால்: அத்வானியை சந்தித்தார் ஹசாரே

வெள்ளி, 1 ஜூலை 2011 (17:01 IST)
லோக்பால் மசோதா விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் இன்று காலை பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை சந்தித்துப் பேசினர்.

பிரதமர் அலுவலகத்தையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவருவது உள்பட லோக்பால் மசோதா விவகாரம் குறித்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, தங்களது நிலையை விளக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளதாக அண்ணா ஹசாரே தெரிவித்திருந்தார்.

அதன்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வரும் ஹசாரே, இன்று அத்வானியை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, பயனுள்ளதாக இருந்தது என்றார்.

மேலும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும்போது, வலுவான மசோதாவுக்காக அருண்ஜெட்லி,சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அத்வானி ஆகியோரை பலமாக வாதிட வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாகவும் ஹசாரே மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்