மம்தாவின் ஓரவஞ்சனை: அவையில் கூச்சல், குழப்பம்

வெள்ளி, 25 பிப்ரவரி 2011 (13:35 IST)
2011-12 ஆம் நிதியாண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தமது சொந்த மாநிலமான மேற்கு வங்க மாநிலத்திற்கே அதிக அளவிலான திட்டங்களை அறிவித்து வருவதால், மற்ற மாநில உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

நண்பகல் 12.10 மணியளவில் மக்களவையில் இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், திட்டங்களையும் வரவு-செலவு கணக்கு விவரங்களையும் அறிவித்து வருகிறார்.

இதில் கொல்கட்டாவிற்கும், மேற்கு வங்கத்திற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்த மம்தா, பல புதிய ரயில் சேவைகளை அறிவிக்கத் தொடங்கியதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மம்தாவின் இந்த ஓரவஞ்னையை எதிர்த்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சில நிமிடங்களுக்கு அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்