திருப்பதியில் ' ஜரிகண்டி' - க்கு தடை!

செவ்வாய், 9 ஏப்ரல் 2013 (12:45 IST)
FILE
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அவர்களை விரட்டுவதற்கும், விரைவாக செல்லும்படி வலியுறுத்தி தள்ளிவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யும்போது, அவர்களை வெளியேற்றும் பணியில் தேவஸ்தான காவலர்கள் ஈடுபடுவர்.

பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் வேளையில், காவலர்கள் மரியாதையின்றி குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் என்றுக்கூட பாரபட்சம் பாராமல் லத்தியால் விரட்டுவது மனதை புண்படும் விதத்தில் இருப்பதாக பல பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

பக்தர்களின் புகாரின் பேரில், இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வதத்தில் அவர்களை விரட்டுவதற்கும், விரைவாக செல்லும்படி வலியுறுத்தி தள்ளிவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்