கார்ட்டோசாட் 2பி மார்ச்சில் ஏவப்படும்: இஸ்ரோ

செவ்வாய், 5 ஜனவரி 2010 (16:49 IST)
நிலப்பரவை துல்லிமாக படம் பிடித்து அனுப்பும் அதி நவீன கார்ட்டோசாட் 2பி தொலை நுகர்வு செயற்கைக்கோள் (Remote Sensing Satellite) வரும் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் பள்ளி சிறுவர்களுக்கு விண் அறிவியல் தொழில்நுட்பத்தை கற்பிக்க உதவும் கணினி வழியிலான வசதியைத் துவக்கி வைத்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.இராதாகிருஷ்ணன் இத்தகவலை வெளியிட்டார்.

ஜி.எஸ்.எல்.வி. என்றழைக்கப்படும் புவி மைய செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தில் பயன்படுத்தக் கூடிய திரவ எரிபொருள் இயந்திரத்தை (Cryogenic Engine) மிக விரைவில் சோதிக்க உள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுவரை செலுத்தப்பட்ட இரண்டு கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களின் வாயிலாக பெறப்படும் தகவல்கள் ஊரக, நகர்ப்புற மேம்பாட்டைத் திட்டமிட பயன்பட்டு வருவதாகத் தெரிவித்த இராதாகிருஷ்ணன், ஜி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனத்தைப் பயன்படுத்தி விண்ணிற்கு மனிதன் அனுப்ப முடியும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்