உயிரோடு இருக்கும் 3 ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு இரங்கல் தெரிவித்த கெஜ்ரிவாலின் கூத்து!

செவ்வாய், 11 மார்ச் 2014 (12:48 IST)
கடந்த சனிக்கிழமையன்று அரவிந்த் கெஜ்ரிவால் அகமாதாபாதில் மக்களிடையே பேசும்போது ஊழலை எதிர்த்ததற்காக கொலை செய்யப்பட்ட தகவலுரிமை சட்ட செயல் வீரர்கள் 4 பேருக்கு தான் இரங்கல் தெரிவிப்பதாக அறிவித்தார். உடனே கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்துள்ளது.
FILE

சலசலப்புக்குக் காரணம்: அவர்கள் 4 பேரில் 3 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே. உயிருடன் இருப்பவர்களையும் கெஜ்ரிவால் இப்படி கொலை செய்து விட்டாரே என்று சலசலப்பு எழ, அருகில் இருந்த ஆம் ஆத்மிக் கட்சியினருக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிவிட்டது.

கெஜ்ரிவால் கூறிய முதல் பெயர் அமித் ஜேதவா. இது சரியான பெயரே. சுரங்க மாபியா ஒருவரால் ஜேதவா குஜ்ராத் உயர்நீதிமன்ற வாசலில் 2010ஆம் ஆண்டு ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டார்.
FILE

மீதமுள்ள மூன்று பேர் பாகு தேவானி (போர்பந்தர்), மீனாட்சி கோஸ்வாமி (தெற்கு குஜராத்), எம். பாம்பானி ஆகியோருக்கும் சேர்த்து இரங்கல் தெரிவித்தார் கெஜ்ரிவால் ஆனால் இவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை.

உயிர்த்தியாகம் செய்ததாக கெஜ்ரிவால் கருதிய தேவானி என்பவருக்கு வயது 64, இவர் வழக்கறிஞர். இவர் கூறுகையில், "நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கப்பட்டேன், ஆனால் இன்று நன்றாகவே இருக்கிறேன், ஊழலுக்கு எதிரான எனது எத்ர்ப்பு தொடரும் விரைவில் ஆம் ஆத்மியில் இணைவேன். தகவலுரிமை சட்ட செயல்பாட்டிற்கு கெஜ்ரிவால் உறுதுணையாக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்றார்.

ஜூலை 25,2011 அன்று தேவானியை போர்பந்தரில் காரில் இருந்து இழுத்து தாக்கினர், வயிற்றில் குத்து விழுந்தது. குஜ்ராத் அமைச்சர் பாபு போகிரியா இதற்கு காரணம் என்று வழக்கே தொடர்ந்தார் இவர். பாபு போகிரியா பல சட்ட விரோத சுரங்களுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி 42 வயது ஊழல் எதிர்ப்பாளர் பாம்பானியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் கூறுகிறார், "நான் உயிருடன் இருப்பதே ஆச்சரியம்தான், வாள், பைப்கள் கொண்டு தக்கப்பட்டேன், அதன் பிறகு ஆசிட் வீச முயன்றனர். உணவு விடுதி ஒன்றை அமைக்க போலி உரிமம் அளிக்கப்பட்டதற்கு எதிராக நான் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

மற்றொரு நபர் கோஸ்வாமி தனியார் நிறுவனம் ஒன்று பெற்றிருந்த சுற்றுச்சூழல் சலுகை சான்றிதழின் தன்மைகளை அறிய ஆர்.டி.ஐ. யில் மனு செய்திருந்தார். இதனால் இவர் செப்டம்பர் 2011-இல் தாக்கப்பட்டார்.

உயிருடன் இருக்கும் 3 பேரை கொல்லப்பட்டதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்தது பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்