அப்சல் தூக்கில் சட்ட விதி மீறல்- இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (11:15 IST)
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் சட்ட விதிகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, புதிதாக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு குற்றவாளிக்கு வழங்குவது உள்பட நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது சட்ட விதிகளை ஒட்டுமொத்தமாக மீறிய செயல் என்றும். குற்றவாளியை தூக்கில் போடுவது தொடர்பான தகவல் அவரது உறவினருக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. திட்டமிட்ட இந்த செயல் காரணமாக, குற்றவாளியை அவரது குடும்பத்தினர் இறுதியாக சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்லாமல் மிக பெரிய மனித உரிமையை மீறிய செயல் ஆகும்.

எதிர்காலத்தில் இதுபோன்று சட்ட விதிகள் மீறப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மரண தண்டனைக் கைதியின் இறுதிச் சடங்குகளைக்கூட விதிகளின்படி மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் முறன்பாடாகவே அப்சல் குருவின் மரணம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்