ஆரஞ்சு மிட்டாய்-விமர்சனம்

சங்கரன்

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (11:33 IST)
ஆரஞ்சுமிட்டாய் என்றாலே புளிப்பும் இனிப்பும் கலந்த சுவைதான் நினைவுக்கு வரும். நம் வாழ்க்கையும் அப்படிப்பட்டதுததான் என தீர்க்கமாக வெறும் ஒரு மணி நாற்பத்தோறு நிமிடங்கள்ல சொல்லி (அவ்ளோ சின்னப் படம்) தமிழ்சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவை உடைத்திருக்கிறார் இயக்குநர் பிஜூ விஸ்வநாத். வாழ்த்துக்கள்.

விஜய் சேதுபதி வயதான நோயாளி வேடத்தில் துணிச்சலாக நடித்திருக்கிறார். பசுமைமமாறா கிராமமான அகஸ்தியப்பட்டில வாழும் இவர் அடிக்கடி நெஞ்சுவலின்னு 108 க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ வரவழைச்சு ஜாலிப்பேர்வழி. அவரிடம் மாட்டிக்கொள்ளும் ஆம்புன்சில் முதலுதவி செய்யும் இளைஞராக வரும் ரமேஷ் திலக்கின் நடிப்பு அற்புதம் அவருடன் இணைந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறு பாலா கைகோர்த்து சிரிக்க வைப்பது அருமை.

இறுதியில் அப்பாவை இழந்த ரமேஷ் திலக் மகனது ஆதரவில்லாத விஜய் சேதுபதியை தன் அப்பாவாக எண்ணுகிறார். இருக்கும்போதே பெத்தவங்கள நல்லபடியா பார்த்துக்கணும்னு வலியுறுத்துகிறது படம். இதற்கிடையில் நாயகி ஆஷ்ரித்தாவின் மெல்லிய காதல். தேர்ந்த நடிகையாக வருவார். விஜய் சேதுபதி நடிப்பதோடு மட்டடும் நில்லாது தயாரிப்பு, பாடல்கள், வசனம் என மனிதர் பின்னியிருக்கிறார்.

குறிப்பாக நான் அவனுக்கு அப்பன், தயங்குறதால எதுவும் நடக்கப் போறதில்ல. நமக்கு எது சரின்னு படுதோ அதை தான் செய்யணும், நான் உன் கண்ணுக்கு நல்லவன்னு தெரிஞ்சா நடிக்கிறேன்னு அர்த்தம். கெட்டவனா தெரிஞ்சா யதார்த்தமா இருக்கேன்னு அர்த்தம் போன் வசனங்கள் நச்ச்சுன்னு இருக்கு. அடடா இவ்ளோ... திறமைய இத்தன நாளா எங்க ஒளிச்சி வெச்சிருந்தீங்க?

பாடல்கள்ல தீராத ஆசைகள், பயணங்கள் தொடருதே சூப்பர் மெலடி. புதுமுகம் ஜஸ்டின் பிரபாகரன் இசை வாவ்... போட வைக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு. இயக்கம் என கலக்கியிருக்கிறார் இயக்குநர் பிஜூ விஸ்வநாத்.

ஆரஞ்சு மிட்டாய் அடடா என்ன சுவை! ஆனால் கமர்சியல் ரசிகர்களுக்கு கேள்விக்குறிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்