ராட்டினம்

புதன், 25 ஏப்ரல் 2012 (15:09 IST)
வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் தயா‌ரிப்பில் உருவாகியிருக்கும் படம். கே.எஸ்.தங்கசாமி எழுதி இயக்கியிருக்கிறார்.

கப்பலுக்கு பொருட்களை சப்ளை செய்யும் இளைஞனுக்கும், துறைமுகத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகா‌ரியின் மகளுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமுகம் லகுவரன், ஸ்வாதி இருவரும் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். சுந்தர் ஒளிப்பதிவு. மனுரமேஷன் இசை. விவேகாவும், பிரான்சிஸ் கிருபாவும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ளார். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ராட்டினத்தை கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட இயக்குனர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்