மாற்றான்

வியாழன், 11 அக்டோபர் 2012 (14:13 IST)
FILE
சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம். கே.வி.ஆனந்த் இயக்க, சுபா வசனம் எழுதியுள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார்.

சூர்யா அகிலன், விமலன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் இருவர் சாது, இன்னொருவர் கற்பனை செய்ய முடியாத குணம் கொண்டவர். இவர்களின் லவ் அஃபையராக காஜல் அகர்வால். இவர்களுடன் விவேக், சச்சின் கடேகர், தாரா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் காட்சிகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டிற்கு அருகிலும் எடுக்கப்பட்டன. இதுதவிர பல வெளிநாடுகள். சிஜி வேலைகள் அமெரிக்காவில் நடந்தன.

மாற்றானுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு சௌந்தர்ராஜன், எடிட்டிங் ஆண்டனி, கலை ராஜிவன். பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, மதன் கார்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கும் இந்தப் படம் நாளை தமிழகத்தில் வெளியாகிற அதேவேளை தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது. பிரதர்ஸில் சூர்யாவுக்கு தெலுங்கு டப்பிங் பேசியிருப்பவர் அவரது சகோதரர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்