காத்து, கருப்பு, பேய், பிசாசு போன்ற கிராமத்து நம்பிக்கைகள் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கின்றன, அதற்கு என்ன தீர்வு என்பதை சொல்கிறது பாலு மலர்வண்ணனின் ஒத்தவீடு.
விஸ்ஸிங் வெல் புரொடக்சன் சார்பாக தேவகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர் திலீப்குமார் ஹீரோவாக அறிமுகப்படுத்துள்ளார். இவருக்கு ஜோடி ஜானவி. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சுப்புராஜ், வடிவுக்கரசி ஆகியோரும் நடித்துள்ளனர். வீ.தஷி இசையமைத்துள்ளார். ரஞ்சன்ராவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதில் ஒன்றை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். பேய், பிசாசு போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மீதான பயமே ஒருகட்டத்தில் மனநோயாகிவிடுகிறது. இதுபோன்ற படங்களில் ரசிகர்களை பயமுறுத்தவே பேய், பிசாசு போன்ற விஷயங்கள் கையாளப்படும். இந்தப் படத்தில் அந்தப் பயத்துக்கான தீர்வை சொல்லியிருப்பதாகக் கூறுகிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் பாலு மலர்வண்ணன்.
மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.