ஈசா

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (20:04 IST)
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜெ.கே.கி‌ரியேஷன் என்ற புதிய படநிறுவனம் சார்பில் ஈசா படத்தை தயா‌ரித்திருக்கிறார். இதில் விக்னேஷ்வரன் கதாநாயகன்.

WD
உப்பளத்தில் வேலை பார்க்கும் சுடலீசன் என்ற உப்பள தொழிலாளியாக விக்னேஷ்வரன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி ல‌க்சனா. படத்தில் செல்வி என்ற அப்பாவி உப்பள தொழிலாளியாக வருகிறார்.

முரட்டுத்தனமான நாயகனுக்கும், எதுவுமே தெ‌ரியாத அப்பாவி நாயகிக்கும் நடுவில் ஏற்படும் காதலை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலகணேசா. இவரே படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடி உப்பளத்திலும், ராஜபாளையத்திலும் படமாக்கப்பட்டுள்ளன.

எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு மனோகர், சுப்புரா‌ஜ், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன்களாக தூத்துக்குடி ரnஜந்திரன், வி.பி.டி.பிரசாத், ராயபுரம் அரு‌ள், மதுராந்தகம் வெங்கட் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

ஹரன் படத்துக்கு இசையமைத்துள்ளார், பாடல்கள் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு ஆர்.பி. பாலகணேஷ், சண்டைப் பயிற்சி ட்ராகன் சிங்லி.

வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்