ஹலால்' சான்று பெற்ற பொருட்களின் விற்பனைக்கு தடை: உபி அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (08:32 IST)
ஹலால் சான்று பெற்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உத்தரப்பிரதேச  மாநில அரசு தெரிவித்துள்ளது.  

இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்ட உணவு  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  "ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட் - சென்னை, ஜமாத் உலமா ஹிண்ட் அறக்கட்டளை - டெல்லி, ஹலால் கவுன்சில் ஆப் இண்டியா- மும்பை, ஜமாத் உலமா - மும்பை ஆகிய அமைப்புகள் சில பொருட்களுக்கு சட்டவிரோதமான ஹலால் சான்றிதழ் அளித்து வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு நேற்று முன்தினம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில்  ஹலால் தரச் சான்று பெற்ற பொருட்களை விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இந்த தடை கிடையாது என்றும் தெரிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்