டெல்லியில் வழக்கறிஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:59 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் விரைவில் கூட இருக்கும் நிலையில் பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் தனியார் விடுதி ஒன்றில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் எதற்காக அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை. ஆனாலும் அவர் வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாளை பாஜக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்