2,400 திரையரங்குகளில் சிங்கத்தின் கர்ஜனை!

புதன், 3 ஜூலை 2013 (15:09 IST)
இன்னொருமுறை சொன்னாலும் தவறில்லை. பல திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் எந்திரனைவிட அதிக லாபத்தை பெற்றுத் தந்த படம் சிங்கம். இதன் பொருள் எந்திரனைவிட சிங்கம் அதிகம் வசூலித்தது என்பதல்ல.
FILE

ஐந்து லட்சம் கொடுத்து சிங்கத்தை திரையிட்ட திரையரங்கு உ‌ரிமையாளருக்கு சிங்கம் பதினைந்து லட்சம் வசூலித்து தந்தது. லாபம் பத்து லட்சம். அதே திரையரங்கில் எந்திரனின் வசூல் இருபத்தைந்து லட்சம். ஆனால் எந்திரனுக்கு இருபது லட்சம் தந்ததால் திரையரங்கு உ‌ரிமையாளருக்கு லாபம் ஐந்து லட்சங்கள் மட்டுமே.

ஓகே, விஷயத்துக்கு வருவோம். சிங்கத்தின் வெற்றி ஹ‌ரியையும், சூர்யாவையும் மீண்டும் இணைய வைத்தது. சிங்கம் 2 வுக்குதான் ஹ‌ி அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார். கதை விவாதத்துக்கும், காட்சிகளை படமாக்கவும். சிங்கத்தில் நடித்த அனைவரும் - பிரகாஷ்ரா‌ஜ் முதல் பாகத்தில் கொல்லப்பட்டதால் அவர் மட்டும் இல்லை - சிங்கம் 2-வில் நடித்திருக்கிறார்கள்.

கூடுதலாக ஹன்சிகா, சந்தானம், பி‌ரிட்டீஷ் நடிகர் டேனி சபானி. அவர்களுடன் நாசர், ராதாரவி, ரகுமான், மன்சூர் அலிகான் ஆகியோரும் இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனோரமாவும் தலைகாட்டியிருக்கிறார். ஒரு குத்துப் பாடலில் அஞ்சலி.
FILE

பாடல் காட்சிகளுக்குகூட வெளிநாடு செல்ல தயங்கும் ஹ‌ி இந்தப் படத்துக்காக கென்யா, துபாய், டர்பன், கேப் டவுன் என பல இடங்களில் வசனக் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார். சிங்கம் 2-வுக்கு சர்வதேச பிளேவர் ஏற்றுவதற்காக இந்த முயற்சி. சூர்யாவும் சர்வதேச தீவிரவாதிகளைதான் இதில் வேட்டையாடுகிறாராம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஹ‌ரியின் ஆஸ்தான கேமராமேன் ப்‌ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேந்தர் மூவிஸ் 600 திரையரங்குகளில் படத்தை - தமிழகத்தில் - வெளியிடுகிறது.

கேரளாவில் சிங்கம் 2 என்ற பெய‌ரிலும், ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் தெலுங்கிலும் படம் வெளியாகிறது. இந்த மாநிலங்களையும், வெளிநாடுகளையும் சேர்த்து மொத்தம் 2,400 திரையரங்குகளில் சிங்கம் கர்‌ஜிக்க இருப்பதாக தகவல்.

ூலை ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்